Show all

சுறுசுறுப்பான தமிழக மக்களுக்கு, செயல்படாத அரசுக்கு இரண்டு முதல்வர்கள் ஒரு கேடு.

23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.

பொதுமக்களுக்கு உதவுவது என்றபேரில் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காக்கிச்சட்டை, நீலச்சட்டை அணிந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்குவார்கள். ஆனால் தற்காலிகாக ஓட்டுநர்கள் ஜீன்ஸ், டி சர்ட் சகிதமாக பேருந்துகளை ஓட்டுகின்றனர். அதே போல சிலர் கல்வீச்சில் இருந்து தப்பிக்க தலைக்கவசமும் அணிந்து கொள்கின்றனர்.

நடத்துநர்கள் சீட்டு வசூல் பணத்தை மஞ்சள் பையில் வாங்கிப் போட்டதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் கைலி சகிதமாக களமிறங்கியுள்ளனர்.

பல புதிய ஓட்டுநர்கள் பேருந்தில் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர் மக்கள். சிலரோ நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்துடன் பயணித்து வருகின்றனர்.

4 நாட்கள் போராட்டத்தினால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் இந்தப் போராட்டம் நீடித்தால் ஏற்கனவே இழப்பில் இயங்கும் போக்குவரத்து கழகம் அதள பாதளத்திற்கு செல்லும் என்பது ஆச்சரியமில்லை.

மருத்துவ மனைகளில் மருந்து விநியோகமே இல்லையாம். அம்மா உணவகங்கள் திறப்பதே யில்லையாம். எம்ஜியார் நூற்றாண்டு விழாக்களுக்கு மக்களேயில்லையாம். எதற்கு பெயருக்கு ஒரு வெற்று அறிக்கை அரசு. சுறுசுறுப்பான தமிழக மக்களுக்கு செயல்படாத அரசுக்கு இரண்டு முதல்வர்கள் ஒரு கேடு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,660

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.