Show all

குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழகத்தின் 30மாவட்டங்களில் ரூ100 கோடி செலவில் குடிமராமத்து திட்டம்

கோடைகாலங்களில், வேளாண் குடிமக்களில் வீட்டுக்கு ஒருவர் என வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள்கண்மாய்கள்குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தியும் பணிகள் மேற்கொண்டனர். மேலும் பழுதடைந்த மடைகளை பழுது நீக்குவர். குடிமக்களின் இப்பணியை குடிமராமத்துப்பணி என்று அழைப்பர்.

     குடிமராமத்து திட்டத்தினை மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

     தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் ஏரிகளில் எதிர்பார்த்தபடி தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

     தற்போதைய நிலையில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் இப்போது 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

     இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தினை மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.  100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

     குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழகத்தின் 3௦ மாவட்டங்களில் 1௦௦ கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரி புனரமைப்பு செய்யப்படும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் புனரமைத்தல் மற்றும் மதகுகள் மறுக்கட்டுமானம் செய்யப்படும்.  2017-18ஆம் ஆண்டில் குடிமராமத்து பணிகள் ரூ.300 கோடி செலவில் செயல்படுத்தப்படும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.100 கோடி மதிப்பில் 1519 பணிகள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.