05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் புத்தாண்டிலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலாவரும் விலங்குகளை இனி இயங்கலை மூலம் நேரடியாக கண்டு ரசிக்கும் வசதியை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் வனவிலங்கு பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா என்ற பெயரில் இயங்கும் இந்த பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் வந்து நேரத்தை கழித்து செல்கின்றனர். புது முயற்சி ஒன்றை வண்டலூர் பூங்கா நிருவாகம் மேற்கொண்டுள்ளது. செல்பேசியிலோ அல்லது கணினி மூலமாக நேரலையில் வனவிலங்குகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்பதை காணலாம். அரசு அறிமுகப்படுத்தியுள்ள https://www.aazp.in/live-streaming/ இந்த இணையதள முகவரியில் சென்று வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கலாம். இணையதள முகப்பு உங்களை பூங்காவின் உள்ளேயே அழைத்து செல்லும் அனுபவத்தை அளிக்கிறது. விலங்குகள் புகைப்படத்துடன் பெயரும் அடங்கிய இந்த இணைய தளத்தில் நீங்கள் பார்க்க நினைக்கும் விலங்கு அல்லது பறவையின் புகைப்படத்தை தொடுவதால் அந்த விலங்கோ அல்லது பறவையோ தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை காணும் வாய்ப்பை நேரடியாக அளிக்கிறது. வீட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வண்டலூர் பூங்காவில் உலா வரும் விலங்குகளை கண்டு மகிழலாம். அங்கு பொருத்தப்பட்டுள்ள படக்கருவி வழியாக நம்மால் இதை காண முடிகிறது. வண்டலூருக்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் நீண்ட நாள் கனவாக வர நினைப்பவர்கள் இதன் மூலம் நேரில் கண்ட அனுபவத்தை உணரமுடியும். நேரில் சென்று நிதானமாக, பலர் பார்த்தும் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் வனவிலங்குகளை நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து கொண்டே நிதானமாக கண்டு ரசிக்கலாம். உங்களுக்கும,; உங்கள் குழந்தைகளுக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை அளிக்கும் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,761.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



