Show all

'உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்' என்பதற்கே ஒரு நூலா! டெல்லி பல்கலைக்கழகத்தில் வெளியீட்டு விழா

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 289 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். திருக்குறள் கருத்துக்களை 225 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே என்பவர்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது திருக்குறள்.

இந்திய மொழிகளில் குஜராத்தி, ஹிந்தி, வங்காளம், கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

ஆசிய மொழிகளில் அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மொழிகளில் செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சுமொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவைகளை யெல்லாம் குறித்து விரிவாக, ஒரு நூலாக   டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்' எனும் தலைப்பில் இன்று வெளியிடப்பட்டது. 

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பேராசிரியர் எச்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைமை உரையாற்றிய அவர் திருக்குறளின் கருத்துகளோடு ஒன்றி வரும் இந்திய மொழிக் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி உரையாற்றினார்.

இந்நூலை வெளியிட்ட ஊடகவியலாளர் மாலன்  சிறப்புரை ஆற்றினார். இதில், மொழிபெயர்ப்பு பற்றிய கருத்துகளை அவர் எடுத்துரைத்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.