சென்னையில்- இருநூறு நாட்களைத் தாண்டி மழையில்லை; நூறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பும் இல்லை. 12 நிறுவனங்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன. 29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்ளில் மட்டும் 3.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றில் பல நிறுவனங்கள் குடிநீரையும் வீட்டில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றன. 12 நிறுவனங்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன. சென்னைக்கு கடந்த 200 நாட்களாக மழை பெய்யாத நிலையில், அடுத்த 100 நாட்களை எப்படி சந்திப்பது என்ற கவலை சென்னை வாசிகளை சூழ்ந்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, குடிநீர் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வீராணம் ஏரி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் போன்ற இடங்களில் இருந்தும், வேறு மாற்று வழிகள் மூலமும் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சென்னை உயர்அறங்கூற்றுமன்றமும் சென்னை குடிநீர் விநியோகம் குறித்து அரசிடம் அறிக்கை கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



