Show all

ராஜபட்சவின் மைத்துனருக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சனவரி 12 அன்று வந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கண். இளங்கோ, சின்னத்தம்பி, பேட்ரிக், கராத்தே பழனிச்சாமி, மோனிகா ஜான்சன் உள்ளிட்ட 17 பேர் மீது ராமேசுவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ராமேசுவரம் உரிமையியல், குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், குற்றத்தை நிரூபிக்க உரிய சாட்சிகள் இல்லை எனக் கூறி அனைவரையும் விடுவித்து செய்து குற்றவியல் நடுவர் பிரபாகரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.