தமிழக அரசியலில்
ஜெயலலிதா, கருணாநிதி, விஜய்காந்த் போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் உருவாகியுள்ளது.
வலிமையான அரசியல் தலைவர் யாரும் இல்லாத சூழல் தமிழகத்தில் பல குழப்பங்களுக்கு வித்திட்டு
வருகிறது. இதை பாரதிய ஜனதா கட்சி தமக்கு சாதகமாக்கிக் கொள்ள
படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்தை வளைத்துப் போட பெரும்
போராட்டமே நடத்தி வருகிறது பாஜக. பாஜகவில் ரஜினிகாந்த் இணைந்தால் அவரை முதல்வர்
வேட்பாளராக்கவும் அக்கட்சி முன்வந்தது. ஆனால் ரஜினிகாந்தோ தனிக்கட்சி தொடங்குவதில்தான்
மும்முரமாக இருக்கிறார். தனிக்கட்சி தொடங்கும்போது எதிர்கொள்ள வேண்டிய
சவால்கள், எப்படி அவற்றை கையாள்வது என்பது குறித்து முக்கிய பிரமுகர்களிடம் ரஜினிகாந்த்
ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரிடமும்
தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த். இந்த சந்திப்புகளின் போது, இப்போதாவது நீங்கள்
அரசியலில் இறங்க முடிவெடுத்தது நல்லது; இந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாதீர்கள் என
பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது ரஜினிகாந்தை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளதாம் பாரதிய ஜனதா கட்சி விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டார்
நடிகர் ரஜினிகாந்த். தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக இருப்பதுடன் இது தொடர்பாக தீவிர
ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார் ரஜினிகாந்த். பாஜக தமிழகத்தில் இருப்பதாகக் காட்டுவதற்கே ஏதாவதொரு
நல்ல குதிரை தேவை. இந்த இலட்சணத்தில் வெட்டவெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டு தகிக்கும்
அக்கினி வெயிலில் பகல் கனவு காண்கிறது பாஜக.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



