இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்த உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரும் அணியமாகின்றனர் இதற்காக எடப்பாடி, பன்னீர் மற்றும் தினகரன் அணியினர் நேரில் அணியமாகிறார்கள். அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, பன்னீர் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன. இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டுள்ளன. இதனால் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை யார் வசம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது. இரட்டை இலைச்சின்னம் யாருக்கு கிடைத்தாலும் எஞ்சிய ஒரு தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி, பன்னீர் அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான தீர்மான நகலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



