20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி அருகே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா பார்வையாளர்களை வெகுவாவாக கவர்ந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில் சாகர்புரத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பண்பாட்டு உடை அணிந்து பொங்கல் வைத்தனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து வெளிநாட்டவர்கள் பொங்கல் வைத்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது. பொங்கல் விழாவைக் கொண்டாடிய நியூசிலாந்து தம்பதியினர் தமிழர்களின் பண்பாடு குறித்து பெருமை பாராட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டது புதுவித அனுபவத்தை அளித்ததாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,657
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



