08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மயில், வேல், பாம்பு, தீபாரதனை, எண்ணெய் விளக்குடன் தமிழர்களைப் போல வழிபாடு நடத்துகின்றனர் ஈராக் யாசிதி இனமக்கள். சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்று பறைசாற்றுவதற்கு மனமில்லாமல், சிந்து சமவெளி நாகரிகத்தின் தனி அடையாளத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக, தமிழர்களை ஹிந்துக்களுக்குள் அடக்கி ஆள எத்தனித்து வருகிறது ஆளும் பாஜக அரசு. உலகம் முழுவதும் தமிழரே வாழ்ந்திருந்தனர் என்பதற்கான அடுத்த சான்றாக ஈரானில் பிராகுய் எனும் தமிழிய மொழி பேசப்பட்டு வருகிறது. ஈரானைத் தாண்டி ஈராக்கில் யாசிதி என்ற இனம் உள்ளது. இவர்கள் தங்களை நாவலந்தேயமாக இருந்து பிறமொழியாளர்களால் ந்தேயா-ந்தியா என்று உச்சரிக்கப் பட்டு இந்தியாவாகிப் போன நிலம் பல்வேறு அயலவர் நுழைவுக்குப் பின்னால் ஆரிய கட்சிகளிடம் நிலத்தை இழந்து விட்ட தமிழர் தொடர்புடையவர்களாக தங்களைக் கருதுகின்றனர். இஸ்லாமியர்களாக, கிறிஸ்துவர்களை தங்களை இப்போதும் மாற்றிக் கொள்ளாமல் யாசிதி இன மக்கள் தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். இவர்களின் வழிபாட்டு முறை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. யாசிதிகளின் வழிபாட்டு தலங்கள் கோபுர வடிவில் இருக்கின்றன. இவர்களது முதன்மையான வழிபாட்டு உருவம் மயிலும் பாம்பும்தான். அத்துடன் தமிழர்களைப் போலவே எண்ணெய் விளக்கு ஏற்றி, தீபாரதனை காட்டி வழிபாடு நடத்துகின்றனர். ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொடூரமாக வேட்டையாடப்பட்டவர்கள் யாசிதிகள். தமிழர் வழிபாட்டு முறையை அப்படியே இன்றும் பின்பற்றுகிறவர்களாக யாசிதி இனமக்கள் இருக்கின்றனர். மயில்கள் பொறித்த பானை ஓடுகள் அன்றைய சிந்துசமவெளி சான்றுகளாக இருக்கின்றன. தமிழகத்தில் குன்றுகள் முருகனின் வழிபாட்டு தலங்களாக இருக்கின்றன. ஈராக்கில் யாசிதி இனமக்களும் குன்றில்தான் தங்களது கோபுர வடிவிலான வழிபாட்டு தலங்களை அமைத்துள்ளனர். யாசிதி இனமக்களின் தமிழர் வழிபாட்டு முறையை பின்பற்றுவது குறித்து ஆய்வைத் தொடங்க வேண்டியது, நடுவண் அரசில் பாஜக, காங்கிரஸ் போன்ற ஆரிய, மதவாத கட்சிகளை அப்புறப் படுத்தி மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சியை ஏற்படுத்திட தமிழர் முன்னிற்க முதன்மையான தேவையாகும். தமிழர் முன்னின்று நடுவண் அரசில் ஆரிய, மதவாத சார்புக் கட்சிகளை அப்புறப் படுத்தி மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சியை நிறுவ தமிழர் உலகத் தாயினம் என்கிற வரலாறு மீட்கப் பட்டாக வேண்டும் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,674
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



