06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு இயங்கலை இதழ், தமிழ் மக்கள் அதிகம் செலவிடுவது எந்த வகைக்காக என்று ஒரு கருத்துக் கணிப்பு விடை தேடுதலில் ஈடுபட்டதில், பெட்ரோல் மற்;றும் டீசல் வகைக்காக என்று 14விழுக்காட்டு பேர்களும், மருத்துவச் செலவுகளுக்கு என்று 7விழுக்காட்டு பேர்களும், மளிகை பொருட்கள், காய்கறிகள் என்று 31விழுக்காட்டு பேர்களும், வீட்டு வாடகை, மின்கட்டண வகைக்கு என்று 48விழுக்காட்டு பேர்களும், கருத்து தெரிவித்து தங்கள் வாழ்க்கை நிலையைத் தெரிவித்திருக்கிறார்கள். மண்ணின் மக்களான தமிழர்கள், காடு தோட்டத்தோடு வாழ்ந்தால் அவர்களுக்கு மளிகை, காய்கறிக்கான செலவுகள் 31விழுக்காடும், வீட்டு வாடகை, மின்கட்டண வகைக்கான செலவுகள் 48விழுக்காடும் தேவையேயில்லை. அனைத்தையும் அவர்களே தயாரித்துக் கொண்டு உபரியை விற்று ஆதாயமும் பெறலாம். தமிழர்கள், தம் உடைமைகளை அயலவர்களிடம் ஒப்படைத்து விட்டு, உடலுழைப்புக் கூலிகளாகவும், நிருவாகக் கூலிகளாகவும் கூலித்தளத்தில் இயங்குவதோடு, அந்த வருமானத்திலும், பெரும்பகுதியை வீட்டு வாடகைக்காகவும் மின் கட்டணத்திற்காகவும் செலவிட்டு, வருகின்றனர் என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நமக்கு உணர்த்துகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



