Show all

தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்! இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், நடுவண் அரசு விழிப்புடன் இருக்க

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வை கண்காணிக்குமாறு, நடுவண் அரசிற்கு தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் ராஜபக்சே எதிரி. கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈழப்போர் முடிவுற்ற போது, ஏராளமான தமிழர்களை சொந்த மண்ணில் கொன்று குவித்தார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ராஜபக்சே தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், நமக்கு அருகில் உள்ள தீவில் நடப்பவற்றை கண்டுகொண்டு நடுவண் அரசு பார்க்க வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ராஜபக்சே மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். ஈழப் போரின் போது ராஜபக்சே தான் அதிபராக இருந்தார். அப்போதைய அரசில் சிறிசேனாவும் ஒரு அங்கமாக இருந்தார். இவர்கள் இருவரும் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடுவண் அரசில் விபிசிங் தலைமை அமைச்சராக இருக்கிறாரா என்ன, ஸ்டாலின் மற்றும் வைகோ அவர்களே! நடுவண் அரசு இலங்கை நடவடிக்கையை கண்டு கொண்டுதானே இருக்கிறது. அதற்கென்றே பாஜகவிலிருந்து சுப்பிரமணியசாமி என்று பேராளரை நியமித்திருக்கின்றார்களே. அவர் கூட ராஜபக்சேவுக்கு வாழ்த்;;தெல்லாம் கீச்சுவில் பதிவிட்டிருந்தாரே. நீங்கள் கவனிக்க வில்லையா?  

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.