Show all

தமிழகத் தேர்தல் கொண்டாட்டம்! மகிழ்ச்சியும், வருத்தமுமாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது

மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் தற்போது தமிழகத்தில்- பழுதுபட்ட வாக்கு இயந்திரங்களோடும், திருதிருக்கும் அதிகாரிகளோடும், நொந்து கொள்ளும் அரசியல்வாதிகளோடும், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பொது மக்களோடுமாக, தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக நடத்தப் பட்டு வருகிறது.
 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள சிலுவம்பாளையம் பகுதியில் தனது வாக்கை செலுத்தினார். மகிழ்ச்சி! 
ஓ.பன்னீர் செல்வம் பெரியகுளம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது அங்கு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவர் வாக்களிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். வருத்தம்!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.