Show all

எய்ம்ஸ் விவகாரத்தில் முக ஸ்டாலின் காட்டம்! பொய்யைச் சொல்லி மக்களை இப்படி ஏமாற்றலாமா

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து நடுவண், மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள நடுவண் அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நடுவண் அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நடுவண் அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்கவேண்டும் என்றனர் நடுவண், மாநில அரசின் அமைச்சர்கள். ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.