Show all

சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

     அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய சசிகலா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் உத்தரவிட்டுள்ளார்.

     அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

     1990களில் வெளிநாட்டு பண பரிமாற்ற சட்டம் வழக்கில் சசிகலா மீது 1996ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. சசிகலா 1996ல் கைது செய்யப்பட்டிருந்தார். சிறை சென்ற சசிகலா பின்னர் பிணையில் வெளியே வந்தார்.

     இதனையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம், மூன்று வழக்குகளில் இருந்தும் சசிகலாவை விடுதலை செய்தது.

     இந்நிலையில் சசிகலாவை வழக்கில் இந்து விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்.

     அதில், சசிகலாவை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

     2015ல் சசிகலா மீதான இரு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தள்ளுபடியானாலும் கூட மேலும் 3 வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. தள்ளுபடி செய்த 2 வழக்குகளிலும் கூட அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சசிகலாவிற்கு சிக்கல் உருவாகியுள்ளது.

     இந்திய நாட்டில் பின்பற்றப் படுகிற சட்ட நடைமுறைகள் ஆங்கிலேயர்கள் அவர்கள் ஆட்சி செய்த அடிமை நாடுகளுக்காக உருவாக்கப் பட்டவை.

     அவர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாம் அந்தச் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து பயன்படுத்தி வருகிறோமேயன்றி முழுமையாக இந்தியப் பன்முக கலாசாரத்தையும், அவர்தம் முன்னேற்றத்தையும் உள்வாங்கும் முகமாக கட்டமைத்துக் கொள்ள வில்லை.

     இந்தியச் சட்டத்தின் கையில் ஒருவரைப் பிடித்துக் கொடுத்து விட்டால், பிடித்துக் கொடுத்தவர் வழக்கை திரும்பப் பெற்றாலன்றி பிடிபட்டவர் எத்தனை நன்னடத்தைச் சான்றிதழைக் காட்டியும் தப்பி விடமுடியாது.

     அதே சமயம் சாம பேத தான தண்டம் செய்துதாம் முன்னேற முடியும். அப்படி சாம பேத தான தண்டம் செய்து முன்னேறுகிறவர்கள் வாழ்க்கை கம்பி மேல் நடக்கிற பிழைப்புதான்.

     அதனால் தாம் தமிழர்கள் யாரும் முதலாளி ஆக முயற்சிப்பதேயில்லை; நல்ல சம்பளத்திற்காக விழுந்து விழுந்து படிக்கிறார்கள்.

     அதனால் தாம் எண்பது விழுக்காடு மக்கள் நமக்கேன் வம்பு என்று,

வம்பு வழக்குகளில் மாட்டாமல் பிழைப்பு நடத்தி வருகின்றார்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.