அதிமுகவின் அரசியல்
களத்தை நிர்ணயித்தவர் நடராசன் என்ற பேச்சு உண்டு. ஆனால் இப்போது வாய்ப்பு தனது மனைவியான
சசிகலாவை தேடி வந்தபோது முழுமையாக பயன்படுத்த முடியாமல் உடல்நலக்குறைவு சதி செய்துவிட்டது
என்ற ஆதங்கத்தில் உள்ளாராம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு
பெங்களூர் சிறையில் சசிகலா இருக்கிறார். இந்த நேரத்தில்
உடல்ரீதியாக பலவீனப்பட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்தில் நடராசன் தவித்து வரும் நிலையில்,
சசிகலாவைச் சந்தித்து ஆலோசிக்க அவர் முயற்சித்த போதும் அவரை சந்திக்க மறுத்தே வருகிறாராம்
சசிகலா. இந்த நிலையில், சசிகலாவின் மறு சீராய்வு மனு சார்பாக
மோடியைச் சந்தித்து சில உதவிகள் கேட்பதற்காக முயற்சி எடுத்துள்ளார் நடராஜன். இதற்காக
பிரதமரின் சந்திப்பு கேட்டு கடிதம் தந்திருக்கிறார். ஆனால் மோடி அலுவலகத்திலிருந்து பதில் இல்லை. இந்தநிலையில்,
வேறு ஒரு வாய்ப்பின் மூலம் ராம்விலாஸ்பஸ்வானை பிடித்துள்ளார் நடராசன். தற்போது, பஸ்வான்,
நடராசனுக்கு உதவ பிரதமர் அலுவலகத்தில் முயற்சிக்கிறாராம். நடராசனின் ராஜ தந்திரங்கள் மோடியிடம் எடுபடுமா
அல்லது, மோடி ஏற்கனவே வகுத்த வியூகத்தில் காய்களை நகர்த்துவாரா என்பது அவர் நடராசனை
சந்திப்பாரா இல்லையா என்பதை வைத்து அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



