18,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடுவண் அரசு செயல்படுகிறது என்று தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மாநில வாரியாக இஸ்லாமிய மக்களின் கருத்தை அறிந்து முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். வாக்கு வங்கியை குறி வைத்துதான் பாஜக செயல்படுகிறது என தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் நலன் குறித்து பாஜக அரசு கவலைப்படவில்லை என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆன்மீகம் என்ற சொல்லை அரசியலில் பயன்படுத்தினால், அது தவறாகத்தான் முடியும் என்று தெரிவித்தார். இரா.கி.நகர் மட்டுமின்றி தமிழக பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைப்பேன்; கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்னைகள் குறித்தும் சட்டப்பேரவையில் பேசுவேன் என்று இரா.கி.நகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள தினகரன் சென்னையில் பேட்டி அளித்தார். தமிழ் மக்கள் ஆதரவு நிலைக்காக தினகரன் உருவானாரா தெரியவில்லை; ஆனால் உருவாக்கப் பட்டுள்ளார்; உறுதியாக நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,655
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



