Show all

தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு...! நடிகை கஸ்தூரி

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் குறித்த வழக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அறங்கூற்றுவர்கள், தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்தப்படுத்த கூடாது என்றனர்.

ஆதார் கொண்டு வந்த நோக்கம் சரியானது. ஆனால் ஆதார் இல்லை என உரிமைகள் மறுக்கப்பட கூடாது. கைபேசி இணைப்பு, வங்கிக்கணக்கு ஆதார் கட்டாயமில்லை. வருமான வரி கணக்கு, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவித்தனர்.

வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் அட்டை தேவை. பான் அட்டைக்கு ஆதார் இணைப்பு கட்டாயம். அப்படியென்றால்?

இதுகுறித்து கீச்சுவில் கருத்து வெளியிட்ட நடிகை கஸ்தூரி, வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் அட்டை தேவை. பான் அட்டைக்கு ஆதார் இணைப்பு கட்டாயம். அப்படின்னா, தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு...' என குறிப்பிட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வரும் ஆனா வராருது நகைச்சுவை போல, சிலவற்றுக்கு ஆதார் கட்டாயம் இல்லை ; ஆனா ஆதார் கட்டாயம்.


-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.