16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து அவர்களின் முத்தான மூன்று ஆலோசனைகள். அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி முன்பாக 3 பிரச்னைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன். முதலில் தனது எதிரி அல்லது எந்த கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். யாரை நட்பாகக் கொள்வது என்பதை பின்னர் கூட முடிவு செய்துகொள்ளலாம். ஆனால், எதிரியை முதலாவதாக முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சாதிக்க முடியாததை, நான் எப்படி சாதித்துக் காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்தக் கொள்கை விளக்கம் என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தீர்மானித்து, தமிழக மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும். சொல்லப்போனால், தலைவன் மற்றும் கலைஞன் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியை இந்த கொள்கைதான் இட்டு நிரப்பும் என்று நான் நம்புகிறேன். மூன்றாவது, கொள்கை என்று ஒன்று அறிவிக்கப்பட்டால், அதைக் கொண்டு செலுத்துவதற்கு, அதை அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும், சிறந்த செயல்வீரர்களும் ஒரு இயக்கத்துக்கு, ஒரு தலைவருக்குத் தேவை. இந்த மூன்றும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்கள் என்று தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,653
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



