புதுச்சேரி சட்டமன்ற
கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருப்பது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் திட்ட துறைமுகத்தை தூர்வாரும்
பணியை நாராயணசாமி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும்
24-ம் தேதி தொடங்கவுள்ள ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் துணை நிலை ஆளுநரின் உரை இடம்பெறாது
என்றார். அரசை நடத்துவதில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயசாமிக்கும் இடையே
அண்மைக் காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நாராயணசாமி தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே முதலமைச்சர் துணை நிலை ஆளுநரின் இடையிலான மோதலால்; புதுச்சேரி அரசியல் களம்
சூடுபிடித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



