Show all

அரசு பள்ளிக்காக ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய புரவலர் பொன்மணி தேவி பாராட்டிற்குரியவர்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானம் செய்த முன்னாள் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற இடவசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சித்தோட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பொன்மணி தேவி அகவை80 என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள தன்னுடைய சொந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.