சொத்துக்குவிப்பு
வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில
அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும்
சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட வழக்கு சென்னை
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்த
வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இந்த
வழக்கு கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு செலவு குறித்து தமிழக
அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சொத்துக்குவிப்பு
வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும். இது கடந்த
2004-ம் ஆண்டு முதல் 2016 வரை செய்யப்பட்ட செலவு. இதில் நீதிமன்ற கட்டணம், நீதிபதி,
வழக்கறிஞர்கள் ஊதியம், பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் அடக்கம்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி மன்றம் செயலலிதா அவர்களை அலைகளித்த போதெல்லாம்
தமிழக மக்கள் செயலலிதா அவர்களை ஆதரிக்கவே செய்தார்கள். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்த
செயலலிதா அவர்களுக்கு, தமிழக மக்கள் தண்டனை வழங்க வேண்டும் என்று கருதியதே இல்லை. நாற்பதும் நமதே என்று அவர்கள் தமிழக மக்களிடம்
கோரிக்கை வைத்தபோது தமிழக மக்கள் அவர்கள் கோரிக்கையை மதிக்கத்தானே செய்தார்கள். காவிரி பிரச்சனையில் தங்களுக்கு சிம்ம சொப்பனமாக
இருந்த செயலலிதாவை வழக்கு வழக்கு என்று இழுத்தடித்து மன உளைச்சலுக்கு உட்படுத்தி கொலை
செய்த குற்றவாளிகள் தாமே கருநாடக அரசும், காவிரி பிரச்சனையில்
கருநாடக அரசுக்கு சோரம் போன திமுகவும், அன்பழகனும், எப்போதும் தமிழினத்திற்கு தீங்கு செய்வதற்கென்றே நாக்கை தொங்க விட்டு அலைந்து
கொண்டிருக்கும் சுப்பரமணிய சாமியும் உங்கள் வழக்கு
செலவுக்கு நீங்களேதானே பொறுப்பு. எங்களுக்கு காவிரி தண்ணீர் ஆதாரத்தை மிரட்டி, உரிமையை
நிலைநாட்டி, வாங்கி வழங்கிக் கொண்டிருந்த தாயை
இழந்த நாங்கள்- உங்களுக்கு எங்கள்
தாயை அழித்த செலவுக்கு பணம் தர வேண்டுமா? குதிரை குப்புறத்
தள்ளி விட்டு குழியும் பறித்த கதையாக இருக்கிறதே! கொலைகார பாவிகளா!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



