08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி தனது கட்சிக்காக புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 3 பெயர்களில் 'சூப்பர் ஸ்டார் டி.வி.' எனும் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அனுமதி வழங்கும்படி சுதாகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினியும் பெயர்அடையாளம் பதிவு செய்யும் அதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, புது ஆண்டில் (ஆங்கில ஆண்டு) மக்கள் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன் என கூறினார். தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ள பேட்ட திரைப்படம் பற்றி கூறுங்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பேட்ட திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் என கூறினார். எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இன்னும் கட்சி தொடங்;கவில்லை. கட்சி தொடங்கிய பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,010.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



