23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர் எல்லையின் கீழ் வரும் அயனாவரம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார் அகவை 33. பணியில் சிறப்பாக செயல்பட்டவர் சதீஷ்குமார். சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியிலுள்ள மேலையூர் ஆகும். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியில் உள்ளார். இவர் நேற்று நள்ளிரவு தான் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு சாதாரண உடையில் வந்துள்ளார். காவல்நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம் தனி அலுவல் உள்ளது என்று கூறி துப்பாக்கியைப் பெற்றுள்ளார். பின்னர் ஒரு வௌ;ளைத்தாளை எடுத்து கடகடவென்று சில வரிகளை எழுதியுள்ளார். பின்னர் துப்பாக்கியை எடுத்து தனது நெற்றிபொபொட்டில் வைத்துள்ளார். இதைப்பார்த்து பதறிப்போன சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவி ஐயா என்ன இது வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது துப்பாக்கியை சிரஞ்சீவியை நோக்கி நீட்டியுள்ளார். பின்னர் வெளியே சென்றுள்ளார். வெளியில் சென்ற சதிஷ்குமார் திடீரென தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு ஆகியோர் நேரில் வந்து விசாரணை நட்த்தினர். சதீஷ்குமார் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுகொண்ட்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டர். அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது. தற்கொலை செய்துக்கொண்ட சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டு சகோதரர்கள் உள்ளனர். தற்போது பணியாற்றும் அயனாவரம் காவல் நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். சென்னை டிபி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது திடீர் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் தற்கொலை செய்வதற்கு முன் சதீஷ்குமார் எழுதிய கடித்த்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்ல, எவ்வித காரணமுமில்லை என்று எழுதியுள்ளார். காவலர்கள் தொடர் தற்கொலைகள் நல்லதல்ல! தமிழக முதல்வருக்கு அன்பான அவசர வேண்டுகோள்! தற்கொலைக்கு முயலும் காவல் பிள்ளைகளுக்கு விடிவு தேடுங்கள் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,719.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



