Show all

'இசட்பிளஸ்' பாதுகாப்பு பெறும் தலைவர்கள் கலைஞரோடு முடிவுக்கு வந்தது! உளவுப்பிரிவு கண்காணிப்பில் உள்ள தமிழகத் தலைவர்களே இனி

27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்றுமன்றம் விடுவித்தாலும் துரத்தி துரத்தி கைது செய்யப்படும் திருமுருகன் காந்தி போன்ற நிலையில் இருந்தவர்தான் கருணாநிதி அவர்கள். படிப்படியாக நம்பகத்;தை உறுதிப் படுத்தி, நடுவண் அரசின் 'இசட்பிளஸ்' பாதுகாப்பு பெற்றிருந்தவர்தாம் கருணாநிதி அவர்கள். செயலலிதாவுக்கும், திமுக. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே நடுவண் அரசின் கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த 'இசட்பிளஸ்' பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய்க் கிழமை காலமானதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட்பிளஸ் பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் 'இசட்பிளஸ்' பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே 'இசட்பிளஸ்' பாதுகாப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டு நடுவண் சிறப்புக்காவல் படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சாதாரண அதிரடிப் படை பாதுகாப்புதான் உள்ளது.

'இசட்பிளஸ்' பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நடுவண் உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும். அதை நடுவண் அரசு பரிசீலித்து தான் 'இசட்பிளஸ்' பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த அடிப்படையில் தான் ஜெயலலிதாவுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும், கருணாநிதிக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தும் 'இசட்பிளஸ்' பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் இறந்து விட்டதால் 'இசட்பிளஸ்' பாதுகாப்பு திரும்பப்  பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது 'இசட்பிளஸ்' பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் தேசிய பாதுகாப்பு படையின் அதிரடி வீரர்கள் 8 பேர் எந்திர துப்பாக்கியுடன் எப்போதும் உடன் வருவார்கள். மூன்று முறைப்பணிகளுக்கு என்று 24 பேர் இருப்பார்கள்.

அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு 40 'இசட்பிளஸ்' அதிரடிப் படையினரையும், கருணாநிதிக்கு 22 'இசட்பிளஸ்' அதிரடிப் படையினரையும் நடுவண் அரசு ஒதுக்கி இருந்தது. அது முடிவுக்கு வந்து விட்டது. 

இப்போது உள்ள அரசியல் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சிறப்பு காவல் படை பாதுகாப்பு தான் உள்ளது.

சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி, வைகோ, விஜய்காந்த், அன்புமணி, கமல்ஹாசன், தினகரன் போன்றவர்கள் எல்லாம் உளவுப் பிரிவு காவலர்களின் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு, ஊழல் செய்வார்கள் ஆனால் ஒருபோதும் நடுவண் ஆளும் ஆட்சிக்கு எதிராக உறுதியான போராட்டம் எல்லாம் செய்ய மாட்டார்கள் என்கிற நம்பிக்கையைப் பெற்று இது போன்ற பாதுகாப்புகள் எல்லாம் பெற்றுக் கொள்ளலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,877.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.