Show all

சிரிக்கறேன் சிரிக்கறேன் சிரிப்பு வரல்லே, அழுகுறேன் அழுகுறேன் அழுகை வரல்லே: அமைச்சர் ஜெயக்குமார்

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் இன்று நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்தே அதிகளவில் கருத்துப்படங்கள் வரைகின்றனர். என் மண்டையில் கிரிக்கெட் விளையாடுவது போல, மோடி என் தலையில் அமர்ந்து யோகா செய்வது போல கருத்துப்படம் உருவாக்குகின்றனர். இவற்றையெல்லாம் உற்சாகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு சிந்தித்து நேரம் செலவழித்து கருத்துப்படம் உருவாக்குபவர்களை நான் வாழ்த்துகிறேன்' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதன்பின், பாடல் ஒன்றில் தன் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட கருத்துப்படத்தை ஜெயக்குமார் விளக்கினார். அப்போது பேசிய அவர், 'அந்த கருத்துப்படம் எனக்குப் புரியாததால் நானே என் நண்பர்களுக்கு அனுப்பி விளக்கம் பெற்றுக்கொண்டேன். சிலவற்றை வெளியில் சொல்வதற்கு சங்கடமாக உள்ளது. எப்படியெல்லாம் அறை போட்டு யோசிக்கின்றனர்' என தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,827. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.