03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாணவி நந்தினி இன்று காரைக்குடியில் நடத்திய அமைதிவழி மதுவிலக்கு கருத்துப் பரப்புதல் பயணத்தின்போது, பாஜகவினர் தகராறு செய்து, அவர்களின் நந்தினி வைத்திருந்த பதாகையைக் கிழித்து, ஒருமையில் பேசினர். அங்கு கூடிய உள்ளூர் மக்கள், பாஜகவைக் கண்டித்தும், மாணவி நந்தினிக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவி நந்தினி, தகராறு செய்த பாஜகவினரின் போக்கை கண்டித்து காரைக்குடி அண்ணா சிலை அருகில் உண்ணாநிலை இருந்து வருகிறார். மாணவி நந்தினியின் கருத்துப் பரப்புதல் பதாகையின் வாசகம் சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். அது அவரின் கருத்து சுதந்திரம். அந்த கருத்தில் தவறிருப்பின் காவல்துறையில் புகார் அளிக்கலாமே தவிர, இப்படி மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,915.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



