03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தன் ஆறாம்நிலாநாள் திருவிழா இன்று தொடங்கியது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தலையாய விழாக்களில் ஒன்றான கந்தன் ஆறாம்நிலாநாள் திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு முழுக்காட்சி தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூசையும் நடந்தது. காலை 6 மணிக்கு மேல் சாமி செயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூசைகள் துவங்கின. யாகசாலையில் சுவாமி செயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளை எழுந்தருளச் செய்து பூசைகள் நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், தொடர்ந்து மூலவருக்கு மாதீபாராதனை நடக்கிறது. மூலவருக்கு உச்சி கால தீபாராதனைக்கு பின் யாகசாலையில் மாதீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் கால பூசைகள் நடக்கிறது. விழாவின் கந்தன் ஆறாம்நிலாநாள் திருவிழா 6 நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருக்கோயில் உள் மற்றும் வெளி பிரகாரங்கள், விடுதி, தனியார் உணவகங்களில் தங்கி விரதம் இருந்து சாமியை கண்டு மகிழ்வார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



