26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராமேசுவரத்திலிருந்து கட்சியைத் தொடங்குவதாக கமல் அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் செல்வாக்கு மிக்க தமிழர்களை கமல் சந்தித்து வருகிறார். அச்சமயம் கலிபோர்னியாவில் சன்னிவேல் மாகாணத்தில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கே.ஆர். ஸ்ரீதரை சந்தித்தார். தமிழரான ஸ்ரீதர் மாற்று சக்தி மின்கலன்கள் தயாரித்து உலக அளவில் பிரபலமடைந்தவர். அவரிடம் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய மாற்று சக்தி திட்டங்கள் குறித்து கமல் ஆலோசனை நடத்தினார். மேலும் தமிழகத்தில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்காக சாத்தியகூறுகள் குறித்தும் அவர் பேசினார். தமிழகம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை தம்மால் கணிக்க முடிகிறது என்று கமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,692
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



