Show all

பொறுப்பான பதில்; அசத்துகிறார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைதான் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுப்பணித் துறையினர் நிகழ்ச்சியின் இருக்கை ஒதுக்கீட்டிற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட்டதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டாலின் வருகையை அதிகாரிகள் முன்கூட்டியே தனது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தால், நிகழ்ச்சியின் இருக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் விதிமுறைகளை தளர்த்தி அவருக்கு முன் வரிசையை

அளிக்குமாறு உத்தரவிட்டிருப்பேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரையோ அவரின் கட்சியையோ அவமதிக்கும் நோக்கில் இது நடத்தப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தி.மு.க. வுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.