Show all

தமிழக சட்டமன்றத்தில் தமிழக மக்களால் தேர்தெடுக்கப் பட்ட முன்னால் முதல்வரின் படத்திறப்பு! தமிழ்மக்களின் அதிகாரம்

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சட்டப் பேரவைத்தலைவர் தனபால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறந்துவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னுரை நிகழ்த்தவுள்ளார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை உரையாற்றவுள்ளார். விழாப்பேருரையை சட்டப் பேரவைத்தலைவர் தனபால் நிகழ்த்த உள்ளார். அனைவரையும் வரவேற்று துணை சட்டப் பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உரையாற்றவுள்ளார். இறுதியில் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்களுக்கும், பேரவை முன்னாள் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையொட்டி தலைமைச்செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திமுக மீது அன்று சர்காரியா குழு விசாரணை, நேற்று நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையின் அலைகற்றை ஊழல் விசாரணை.

செயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு. எம்ஜியார் ஆட்சியும் கலைக்கப் பட்டிருக்கிறது நடுவண் அரசால்.

தமிழகத்தில் திராவிட இயக்கம் தலையெடுத்ததிலிருந்து, தமிழகத்திற்கு என்று எந்த அடிப்படையும் கிடையாது என்றும், தமிழன் ஆளத்தெரியாதவன் என்றும், தமிழன் குற்றப் பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்றும், உலகிற்கு பறை சாற்றுவதற்கான நடுவண் ஆரிய அரசுகளின் முயற்சிகளே எல்லா தமிழக ஆட்சியாளர்கள் மீதான வழக்குகள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, சட்டம் இயற்றுகிற ஆட்சியாளனை, தண்டிக்கிற உரிமை யாருக்கு இருந்தாலும் அது எப்படி மக்களாட்சியாக முடியும். தண்டிக்கிற அதிகாரம் பெற்றுள்ளவர்களின் சர்வாதிகார ஆட்சியாகத்தானே இருக்க முடியும்.

கலைஞரை விட, எம்ஜியார் இவைகளைச் செய்தார். அல்லது செய்யவில்லை. எம்ஜியாரை விட செயலலிதா இவைகளைச் செய்தார். அல்லது செய்யவில்லை. என்று பட்டியல் இட்டு ஆட்சியில் அமர வைக்கிறார்கள் தமிழ் மக்கள். 

குறுக்கே ஒருவர் திருடர், மற்றவர் மொள்ளமாரி, மற்றவர் பொறம்;போக்கு என்று பட்டியலிடும் போது நாம் அனுமதித்துக் கொண்டிருந்தால், நாம் நம்முடைய ஆட்சி அதிகாரத்தை படிப்படியாக இழப்பதற்கு அனுமதிக்கிறோம் என்பதே உண்மை.

என்ற அடிப்படை அறிவில்லாமல். ஒரு ஆட்சியாளன் பாதிக்கப் படும் போது அதே ஆட்சிக்கு முயன்று கொண்டிருக்கிற மற்றொருவன் சோரம் போவது, தமிழர் ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான செயலாகும்.

சட்ட மன்றத்தில், தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முன்னால் முதல்வரின் படத்திறப்பு தமிழ்மக்களின் அதிகாரம்! அதை மறுப்பது தமிழர் ஆட்சிஅதிகாரத்தை முன்னெடுப்பதற்கு எதிரானது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,696

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.