Show all

திண்டுக்கல் மாவட்டத்தில், 146 பேர் ரஜினி மக்கள் மன்றப் பதவிகளை விட்டு விலகிட முடிவு

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகிட முடிவெடுத்துள்ளனர்.

திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றங்களின் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.எம். தம்புராஜ், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக கடந்த கிழமையில்தான் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தம்புராஜ் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையகத்திலிருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, மாநரக, நகர பொறுப்புகளை வகிக்கும் 146 பேர் தங்கள் பதவிகளை விட்டு விலகிட முடிவெடுத்துள்ளனர். சென்னையில் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து விலகல் கடிதம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்புராஜ் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிற நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,735.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.