ஐம்பொழுது: 1. மனித வாழ்க்கையின் நோக்கம் வளர்தலும் உருவாக்குதலும் என்பது தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் தெரிவிக்கும் செய்தி ஆகும். 2. வளர்தலும் உருவாக்குதலும் என்பது உடைமை குவிப்பு ஆகும். 3. உலகின் ஒவ்வொரு நாடும் முன்னெடுக்கும் பணம் உடைமையின் மாற்று அடையாளம் ஆகும். 4. ஒவ்வொரு தனிமனிதனின் உடைமை குவிப்பு இயற்கையின் நோக்கம் ஆகிய வளர்தலும் உருவாக்குதலும் ஆகும். என்று புரிந்திருக்கிறது வகைப்பாட்டியல் ஆன தமிழியல். 5. அதை முதலாளிதனம் என்று கொச்சை படுத்துவது பணத்தின் மீதான தீண்டாமை பேணும் ஒற்றை முதலாளித்தனத்தின் ஆதிக்க அடாவடி ஆகும். 6. குறிப்பிட்ட இனக்குழுவிடம் ஒற்றை முதலாளித்தனம் பேணுவன பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், அமெரிக்கயியம், உலகமதங்கள் ஆகியன. 7. குறிப்பிட்ட அரசியல் கட்சியிடம் ஒற்றை முதலாளிதனம் பேணுவன மார்க்சியம் மற்றும் பொதுவுடைமை தலைப்பைப் கொண்டாடும் அத்தனை அரசியல் கட்சிகளும். திராவிடம், தமிழ்த்தேசியம் போன்ற அமைப்புகளும் இந்தப்பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்கின்றன. 8. தனிமனிதனிடம், பணத்தின் மீதான தீண்டாமைத் திணித்து, உடைமைக்கும் உரிமைக்குமான புரிதலை மழுங்கடிக்கும் நோக்கத்திற்கானவைகளே. குறிப்பிட்ட இனக்குழுவிடம் ஒற்றை முதலாளித்தனம் பேணும் உலக மதங்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியிடம் ஒற்றை முதலாளிதனம் பேணும் மார்க்சியமும். 9. உங்களை! மந்திரத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் கற்று, தனிமனிதனாக, கடவுள் கேட்பின் மூலம் இயக்கமின்மைகளைக் குவித்து, இயற்கையின் நோக்கமான வளர்தலும் உருவாக்குதலிலும் திளைத்திருக்க வாழ்த்துகிறது, தமிழர் வாழ்வியல் கல்வி நிறுவனமான, ஐந்திணைக் கோயில்!
1.கிழமை: செவ்வாய்க்கிழமை
2.நாள்: 17
3.மாதம்: பங்குனி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872665



