Show all

நடுவண் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் முயற்சியில், இந்திய தொழில் நுட்பக் கழக அதிகாரிகள் குறும்பு

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில், தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழாவில் நடுவண் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிதின் கட்காரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஒரு நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவது முறையும், வழக்கமும் ஆகும். 

இந்த விழாவில் சமஸ்கிருத இறை வணக்கப் பாடலை, மேடையில் மாணவர்களைப் பொருள் புரியாமல் வற்புறுத்தி பாடவைக்கப் பட்டிருக்கிறது. நடுவண் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் முயற்சியில், இந்திய தொழில் நுட்பக் கழக அதிகாரிகள் இந்தக் குறும்பு நிகழ்வை அரங்கேற்றியதாகத் தெரிகிறது.

ஆங்கிலம் படித்தாலும் தமிழன் தமிழன்டா என்று சல்லிக்கட்டுக்கு களம் இறங்கியது போன்று, வீரத் தமிழர்கள் தமிழ்நாட்டு அரசு அலுவலகங்களை,  முழுமையாக ஆக்கிரமிக்கும் வரை, இதுபோன்ற கேணத்தனமான குறும்புகள், நிகழ்த்தப் பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,711 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.