16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு 2019வது ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம். ஆரியர் நாள் தொடக்கம்- நன்பகல். ஐரோப்பியர் நாள் தொடக்கம்- நள்ளிரவு. இருளுக்கும் ஒளிக்கும் மையப்பகுதி கதிரவன் உதயம். பழந்தமிழர் 'இருவேறு உலகத்தியற்கை' என்று கண்டுணர்ந்தவர்கள். அதன் பொருட்டே தமிழர் இருப்புக்கும்(ஒளி) இல்லாநிலை(இருள்)க்கும் மையமான கதிரவன் உதயத்தை தொடக்கமாகக் கொண்டனர். ஆரியர் இருப்பை போற்றிக் கொள்பவர் அதன் பொருட்டு அவர்கள் நண்பகலைத் தொடக்கமாக கொண்டனர். இல்லாநிலையிலிருந்து இருப்புநிலை தோன்றயதாக ஐரோப்பியர் நள்ளிரவை தொடக்கமாகக் கொண்டது இயல்பாக பொருந்திவிட்ட அடிப்படைகளே. ஆங்கிலேயர் நம்மை விடுவித்த போதும், அவர்கள் விட்டுச் சென்றவைகள் நிறைய: கட்டிடங்கள், அலுவலகங்கள், அணைகள், சாலைகள், இருப்புப் பாதைகள், நிருவாகச் சட்டங்கள் இப்படிப் பலப்பல. அந்த வகையில் அவர்கள் விட்டுச் சென்றவைகளில் ஆங்கிலப் புத்தாண்டும் ஒன்று. தமிழ்ப் புத்தாண்டை காலையில் கனிவகைகளில் கண்விழித்து கொண்டாடுகிறோம். ஆங்கிலப் புத்தாண்டை நள்ளிரவு வரை விழித்திருந்து கொண்டாடுகிறோம். இது அடிமைத்தனமல்லா விடுதலை கொடுத்தவர்களை மன்னித்து நட்புரிமை கொண்டாடுவது. அன்னியச் சதியை அம்பலப் படுத்த முடியாமல், அப்பாவிகளாய், தமிழர் மீது அன்பு பாராட்டிய காரணத்திற்காய் பலிபாவத்திற்கு உரியவராக மர்மமுடிச்சில் மாட்டப் பட்ட, அந்த அறிவும் அவரோடு அறுவரையும், குற்றவாளியாகவே கூட மன்னிப்பதாக விடியட்டும் ஆங்கிலப் புத்தாண்டு 2019. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,018.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



