Show all

தமிழகத்தில் எச்.ராஜாவின் தொடரும் அருவருப்பு அசிங்கங்கள்

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வேடசந்தூரில் பேசுகையில், தமிழக அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் தமிழக அறநிலையத் துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி இன்று புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அறநிலையத்துறை ஊழியர்களை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து அடுத்த வியாழக்கிழமை அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, புதுக்கோட்டையில் அறநிலையத்துறை ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,914.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.