15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டயபுரம் அருகிலுள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கடந்த கடந்த நூற்றாண்டில் இதே நாளில் பிறந்தவர் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவரும் ஆன கோவிந்தப்பா வெங்கடசாமி. இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கலைஇளவல் வேதியியல் பட்டம் பெற்றார். பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் பிரித்தானிய இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். மலேஷியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளில் மருத்துவப் பணியாற்றினார். இந்த நிலையில், பர்மாவில் மருத்துவ முகாமில் ஈடுபட்டிருந்த போது நச்சுப் பூச்சிகள் கடித்ததால், தீராத தோல் நோய்க்கு ஆளானார். அதோடு முடக்கு வாதத்தாலும் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மகப்பேறு மருத்துவக் கல்வி பயின்றார். எழும்பூரில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார். அப்போது, மீண்டும் முடக்குவாதம் தாக்கியது. அதில், கைவிரல்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. பேனா கூட பிடிக்க முடியாத நிலையும், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்தப் படிப்பைத் தொடர்ந்து 63 ஆண்டுகளுக்கு முன்னம், மதுரை அரசு மருத்துவமனையில், புதிதாக தொடங்கப்பட்ட கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 20 ஆண்டுகளுப் பிறகு மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனையை 11 படுக்கை வசதியுடன் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். மருத்துவப் பிரிவில் பல விருதுகளை பெற்றுள்ள வெங்கடசாமி கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். இந்த நிலையில், இன்று அவரது 100வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் உருவாக்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.
முடக்குவாதத்தால் ஓரளவு குணமடைந்த இவரிடம், நண்பர் ஒருவர் இந்தக் கைகளை வைத்துக் கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே கண் மருத்துவம் பயிலும் படி அறிவுரை வழங்கியுள்ளார். நண்பரின் ஆலோசனைப் படி கண் மருத்துவத்திலும், கண் அறுவை மருத்துவத்திலும் கலைமுதுவர் பட்டம் பெற்றுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



