கோகுலம் சிட் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை
அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகம்,
புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது கோகுலம்
சிட் நிதி நிறுவனம். அந்த
நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று
அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை,
கோவை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட 78 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
இந்தச் சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்
தி. நகர் உள்பட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் கோகுலம் சிட் நிதிநிறுவன 78 அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்
இயங்கி வரும் கோகுலம் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள்
சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்
இது போன்று நூற்றுக் கணக்கான நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும்
தங்கள் மீதும் வருமான வரித்துறையின் அதிரடி பாய்ந்து விடுமோ என்று பீதியில் உறைந்து
போய் இருக்கின்றன. மோடியின் ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பை சாதகமாக பயன் படுத்திக்
கொண்ட குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடுமோ என்று கதி கலங்கி நிற்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



