Show all

கடலில் மீன் பிடிக்கும் பெண்கள்! நம்ம தமிழ் நாட்டில் தான்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர். இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன.

ஆனால், ஆண்கள் மட்டுமே தடம் பதிக்கும் பாரம்பரியத் தொழில்களில், எளிய வாழ்வாதாரத் துறைகளில் பெண்கள் ஆங்காங்கே சாதித்துக்கொண்டும், உழைத்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள். ஊடக வெளிச்சத்தை, இவை எட்டுவதில்லை அவ்வளவே.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சடமுடையான்வலசை, பிச்சைமூப்பன்வலசை, ஆதஞ்சேரி, தோணித்துறை ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மீனவப் பெண்கள் கடலில் தனியாக சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மீனவப் பெண்கள் கடலில் தொழில் செய்து வருகின்றனர். பெண்கள் அதிகாலை ஐந்து மணியளவில் கடற்கரையில் இருந்து வல்லம் என அழைக்கப்படும், படகு மூலம் கரையில் இருந்து ஒரு நாட்டிகல் மைல் (மூன்றரை கிலோமீட்டர்) தூரம் சென்று கடலில் பாசி வளர்ப்பது, மீன் பிடிப்பது, நண்டு பிடிப்பது, கனவாய் பிடிப்பது, இறால் பிடிப்பது போன்ற பல்வேறு கடல் தொழில்களை செய்து வருகின்றனர். பெண்கள் தனித் தனியாகவும், மூன்று நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு குழுவாகவும் மீன் பிடித்து வருகின்றனர். இப்படி குழுவாக பிடித்து வரும் மீன்களை சம பங்குகளாகப் பிரித்து கொள்வார்கள்.

தூண்டில் இட்டு மீன்பிடித்தல், கரைவலை முறையில் மீன் பிடித்தல், கூண்டு வைத்து மீன் பிடித்தல், நண்டு மற்றும் இறால் வலைகள் ஆகியனவற்றை பயன்படுத்தி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி இவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று இறால், கணவாய் போன்ற ஏற்றுமதி ரக மீன்களைப் பிடித்து வருகின்றனர். அவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், பெண்கள் பிடித்து வரும் மீன்கள் உள்ளூர் மீன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,086.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.