18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட நாதெள்ளா நகை நிறுவனம் சென்னையில் தியாகராயநகர், வேளச்சேரி, தாம்பரம், அண்ணாநகர், புரசைவாக்கம், ஓசூர், வேலூர் ஆகிய பல்வேறு இடங்களில் நகை கடைகளை நடத்தி வருகிறது. வங்கிகளிடமிருந்து கடன் பெற்று சுமார் 380 கோடி ரூபாய் திருப்பி செலுத்தவில்லை யென்று நாதெள்ளா நிறுவனத்தின் மீது இந்திய மாநில வங்கி சார்பில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல 21,000 வாடிக்கையாளர்களிடம் நகைக்காக மாத தவணையாக ரூ.75 கோடி பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நாதெள்ளா நிறுவனத்துக்குச் சொந்தமானரூ.328 கோடி மதிப்பிலான 37 சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது. முன்னதாக இதே போன்ற நடவடிக்கையான கனிஷ்க் நகை கடையின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் கடன் வழங்கு முறை, சொத்துக்கள் முடக்கம், அரசின் தலையீடு இவற்றில் எல்லாம் மாற்று முறைகள், பண்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப் படாமல் நிலையான தீர்வு கிடைக்காது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,868.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



