ரோட்டுல சும்மா கல்லெடுத்து போட்டா ஒன்னு நாய் மேல படும் இல்லனா ராயல் ஏபீல்டு மேல படும் . அந்த அளவுக்கு இந்தியாவுல ராயல் என்பீல்ட் பைக்குக்கு கிரேஸ் ! கம்பீரமான தோற்றம் , கர்ஜிக்கும் சத்தம் ! இதெல்லாம் ஓகே ஆனா பெட்ரோல் எவ்ளோ வண்டில இருக்குனு பார்க்க வசதி இல்ல ! வண்டியின் தோற்றத்தை முற்றிலும் ரீடிசைன் செய்யும் திரிசூரை சேர்ந்த 'பண்டிடாஸ் பிட் ஷாப்' எனும் நிறுவனம் தற்போது டிஜிட்டல் ஓடோ மீட்டரை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர் , புயியல் காஜ், ட்ரிப் மீட்டர் என அனைத்தும் உள்ளது. இதன் விலை 3 ,999 ருபாய் மட்டுமே. இதை பொருத்துவதும் மிகவும் சுலபம் . இது பியூஎல் என்ஜின் உள்ள கிளாசிக் 500 சி சி வண்டியில் துல்லியமாக பெட்ரோலின் இருப்பை தெரிவிக்கும் எனவும் , கிளாசிக் 350 சி சி யிலும் இதனை பொறுத்த முடியும் ஆனால் பெட்ரோலின் இருப்பு கச்சிதமாக கணிக்காது எனவும் இதனை உருவாக்கிய 'பண்டிடாஸ் பிட் ஷாப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



