Show all

பாஜகவை அழிக்க தமிழிசை, ராஜா, சேகர் ஆகிய மூவர் போதும்: தினகரன்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பா.ஜ.க வை அழிக்க யாரும் தேவையில்லை,  தமிழிசை, ராஜா, சேகர் ஆகிய மூவர் போதும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்,

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசை கண்டித்து அ.ம.மு.க சார்பில் திருச்சியில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவண் அரசை கண்டிக்க அ.தி.மு.க விற்கு தைரியம் இல்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் அதிமுகவில் உள்ள தன்னுடைய 'உறங்குவிதைகள்' யார் என்பது சட்டமன்ற வாக்கெடுப்பின் போது தெரியும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.க வை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, தமிழிசை, எச்.ராஜா, எஸ்.விசேகர்  போன்றவர்கள் போதும் எனவும் பாஜகவினர் தமிழகத்தில் வளர முடியவில்லை என்கிற விரக்தியில் அவ்வாறு பேசுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

ஆளுநரை நடுவண் அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும்  அந்த பதவிக்கு இழுக்கு ஏற்ப்பட்டு விட்டது என்பதை ஆளுநர் புரிந்துக் கொண்டு தமிழகத்திலிருந்து திரும்ப செல்ல வேண்டும் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.