Show all

பன்னீர் தரப்புக்கு எதிரான வழக்கில் திமுக முன்னெச்சரிக்கை மனு பதிகை

இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அரசுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வமும், அவரது 11 சட்;டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆனால் 122 சட்;டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெற்று வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 சட்;டமன்ற உறுப்பினர்கள் மீது பேரவைத்தலைவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் தினகரனை ஆதரித்த 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்த 18 சட்;டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து 18 சட்;டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்கள் மீது உயர்அறங்கூற்று மன்றத்தில்; விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விசயத்தில் பேரவைத்தலைவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் பன்னீர் உள்பட 12 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்அறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த செம்மலை சட்ட மன்றஉறுப்பினர் அறங்கூற்று மன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் பேரவைத்தலைவர் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது. அதனால் உயர்அறங்கூற்று மன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்சஅறங்கூற்று மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்றஉறுப்பினர்களுக்கு எதிரான வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் முடிவெடுக்க கூடாது என திமுக உச்சஅறங்கூற்று மன்றத்தில்; முன்னெச்சரிக்கைமனு பதிகை செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.