இரட்டை இலை சின்னத்திற்கு கையூட்டு கொடுத்ததாக,
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை
கைது செய்து 5 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து
வரப்பட்ட டிடிவி தினகரனிடம் நான்கு நாட்கள் விசாரணை நடைபெற்றது. . இந்தநிலையில்
டிடிவி தினகரன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் திங்களன்று அணியப்படுத்தப்பட்டார். அவரை
மே 15-ஆம் நாள் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிஅரசர் உத்தரவிட்டார். . இதனைத் தொடர்ந்து
டெல்லி திகார் சிலையில் டிடிவி தினகரன் அடைக்கப்பட்டுள்ளார். திகார்
சிறையில் அடைக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளில் மூன்றாவது அரசியல்வாதி டிடிவி தினகரன்
ஆவார். இதற்கு
முன்பாக 2ஜி முறைக்கேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக மக்களவை பாராளுமன்ற உறுப்பினனர்
கனிமொழியும், முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் இந்த திகார் சிறையில்
தான் அடைக்கப்பட்டனர். தற்போது
கனிமொழி. ஆ.ராசா அடைக்கப்பட்டிருத்த இடமான திகார் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்
டிடிவி தினகரன் சிறைவாசம் அனுபவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு
ஆப்பு கூட்டணி கட்சியான காங்கிரசால்; மாநிலக் கட்சி எதுவும் நடுவண் அரசியல் கட்சிகளுக்கு கீழ்தாம் என்பதை நிலை நாட்டுவதற்கு
என்பதாக இருந்தது. இவருக்கு
ஆப்பு கூட்டணி வைத்துக் கொள்ள வலியுறுத்தி பாஜகவால்; மாநிலக் கட்சி எதுவும் நடுவண் அரசியல் கட்சிகளுக்கு கீழ்தாம் என்பதை நிலை நாட்டும்
அதே கோட்பாட்டிற்கு தாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



