Show all

பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக துக்ளக் இதழை நடத்திய சோ: பிரதமர் மோடி பேச்சு

துக்ளக் இதழின் 47வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி காணொளிக் காட்சியில் உரையாற்றினார். வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். விழாவில் பேசிய மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும் பொங்கல் என்பது சூரிய கடவுளுக்கும், உழவனுக்கும் செலுத்தும் நன்றி என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய மோடி,

நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் விமர்ச்சித்தவர். விமர்ச்சிக்க கடினமான விசயங்களையும் ஒரே வரி கருத்து சித்திரம் மூலம் எளிதாக புரிய வைத்தவர். விமர்ச்சிக்கப்பட்டவர்கள் கூட விரும்பும் தன்மை கொண்டவர் தான் சோ ராமசாமி. சோவின் பெயரை தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை எழுத முடியாது என்றார்.

     மேலும் சோ மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு  என்று கூறிய மோடி பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக துக்ளக் இதழை சோ நடத்தி வந்தார் எனவும் குறிப்பிட்டார். சோவை நேசிப்பதும் புரிந்து கொள்வதும் எளிதானதல்ல என்றும் மோடி குறிப்பிட்டார். பணிச் சுமை காரணமாக இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் இந்த விழா மூலம் எனது நண்பர் சோவுக்கு மரியாதை செய்கிறேன் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.