Show all

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் பதவியேற்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வு

எடப்பாடி கே. பழனிச்சாமி 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

     1991 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

     இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 1998 இல் வெற்றிபெற்றார்.

     2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.

     மீண்டும் 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம் பெற்றுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பான நிலையில் அ.இ.அ,தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

     இவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தின் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் ஆவர்.

     தமிழக முதல்வராக இவர் பொறுப்பேற்று தாம் சார்ந்த வேளாண் பெருங்குடி மக்களின் துயரங்களைத் துடைப்பதற்கும் தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் சிறப்பாகத் தொண்டாற்றிட வாழ்த்துக்கள்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.