Show all

சென்னை நங்கநல்லூர் அஞ்சல் பெட்டியில் 50எல்லைக்கடவுகள் கிடந்தன

சென்னை நங்கநல்லூர் அஞ்சல் பெட்டியில் எல்லைக்கடவுகள் கிடந்தது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

3 நாட்களில் 50 எல்லைக்கடவுகள்; கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. அஞ்சல் பெட்டியில் உள்ள எல்லைக்கடவுகளின் உரிமையாளர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர். நங்கநல்லூர் 48வது தெருவில் அஞ்சல் பெட்டி ஒன்று உள்ளது. இந்தப் பெட்டியில் உள்ள அஞசல்களை சேகரிக்க தினமும் மாலை அஞ்சல் ஊழியர் வருவார்.

அதன்படி, கடந்த 2ம் தேதி மாலை அஞ்சல் ஊழியர் அஞ்சல் பெட்டியில் உள்ள அஞ்சல்;களை எடுக்க வந்தார். அஞ்சல் பெட்டியை திறந்து அஞ்சல்;களை  எடுத்தபோது, அதில் 23 எல்லைக்கடவுகள்; கிடந்தன.

 

இதை தொடர்ந்து, அதே அஞ்சல் பெட்டியில் கடந்த 6ம் தேதி மீண்டும் 14 எல்லைக்கடவுகள் போடப்பட்டிருந்தன. 8-ம் தேதி 13 எல்லைக்கடவுகள்; என மொத்தம் 50 எல்லைக்கடவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  அவர் பெட்டியில் கைவிட்டு அஞ்சல்களை எடுத்தபோது, அவரது கையில் மீண்டும் 13 எல்லைக்கடவுகள்; வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 5  நாட்களில் ஒரே அஞ்சல் பெட்டியில் 50 எல்லைக்கடவுகள் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த 13 எல்லைக்கடவுகளையும் நங்கநல்லூர் நிலைய அஞ்சல் அதிகாரி  அமிர்தலிங்கத்திடம் ஊழியர் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, அந்த 13 எல்லைக்கடவுகளையும் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் அமிர்தலிங்கம்  ஒப்படைத்தார். இதைப்பெற்றுக் கொண்ட பழவந்தாங்கல் காவல்ஆய்வாளர் பலவேசன், பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

 

இந்த எல்லைக்கடவுகள் அனைத்தும் ஸ்பீட் போஸ்ட் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த உண்மையான எல்லைக்கடவுகள் அனைத்தும்  அஞ்சல்;பெட்டியில் இருப்பது விந்தையாக உள்ளதால் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 நாட்களில் 50 எல்லைக்கடவுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.