15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்- சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க அந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி முடிவெடுத்தார். ஆனால் அவர் தொகுதிக்கு வருவதற்கு முன்பே அங்கு பல காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணிக்கு; காவல்துறை அனுமதி மறுத்தது. தருமபுரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று காவல்துறை அவரிடம் கூறியுள்ளது. மேலும் பாப்பிரெட்டிபட்டியில் கருத்து கேட்புக் கூட்டத்துக்கும் அனுமதி இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது. இந்த விசயத்தில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது. உயர்அறங்கூற்றுமன்றத்தில் அன்புமணி முறையிட்டதை அடுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன், அவர் அந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு அங்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இருக்கும் போது, அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,833.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



