சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட
வெள்ளம், பலத்த மழை காரணமாக மட்டுமே ஏற்படவில்லை என்று நடுவண்
புவி அறிவியல் அமைச்சகத்தின் 2015க்கான பருவநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட மிகக் கடுமையான மழை, வெள்ளத்தில்
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும்
இழந்தனர். இந்த மழை, வெள்ளம் குறித்து புவி அறிவியல் அமைச்சக
அறிக்கையில் கூறியிருப்பதாவது, மிகக் கன மழை காரணமாக மட்டுமே சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. போதிய வடிகால்
வசதிகள் இன்மை, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியிருந்தது போன்றவையும் காரணங்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



