Show all

இன்று போகித் திருவிழா!

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை தை முதல் நாள் பொங்கல் கொண்டாடுவதற்கு ஏற்பாக, இன்று மார்கழி இறுதி நாள் தமிழர் வீடுகள் தூய்மை படுத்தப் பட்டு தூய்மை படுத்தியதற்கு அடையாளமாக மாலை காப்பு கட்டப் படும்.

      காப்பு கட்டுவதற்கு கடந்து வந்த பாதையின் அடையாளமாக பீளைப்பூ, எதிர்கால நலத்திற்கான அடையாளமாக ஆவரைப்பூ, பார்வைக் காப்பின் அடையாளமாக வேம்பு இலைக்கொத்தையும், காப்பு ஆக அமைய வீட்டின்முன் கூரையில் சொருகுவார்கள்.

      இன்றே தமிழரின் இயற்கை போற்றும் விழாவான பொங்கல் தொடங்கி விட்டது. இன்றைய விழா போகித் திருவிழா என்று அழைக்கப் படுகிறது.

      மௌவல் செய்தி வாசகர்களுக்கும், தொடர்புடைய நண்பர்களுக்கும், நிறுவனங்களுக்கும் போகித் திருவிழா வாழ்த்துக்களைப் பகிர்வதில் மகிழ்கிறோம்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,666

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.